கார் மோதி வாலிபர் பலி; நண்பர் படுகாயம்

உசிலம்பட்டி அருகே கார் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-04-30 19:07 GMT

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிபட்டியை சேர்ந்த மலைராஜா மகன் சுமன் (வயது 19).இவரும் முண்டுவேலம்பட்டியை சேர்ந்த தங்கமாயன் மகன் சஞ்சித் (18) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டியில் இருந்து மதுரை ரோட்டில் உள்ள கொங்கபட்டி அருகே சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுரையில் இருந்து தேனியை நோக்கி வந்த கார் ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுமன் பரிதாபமாக இறந்தார். சஞ்சித்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் பி.சி.பட்டியை சேர்ந்த கவுதம்சிவா என்றும் அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்