ராமநாதபுரத்தில் கார் மோதி வாலிபர் பலி

ராமநாதபுரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-07-01 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நாகநாதன் மகன் சரத்குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி வசந்திமங்கை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சரத்குமார் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்குவதற்காக கேணிக்கரை வந்தார். தின்பண்டம் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதிநகரை சேர்ந்த முகம்மது பர்கான் என்பவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்