பந்தலூர் அருகே விபத்தில் வாலிபர் பலி:சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை அகற்றம்-அதிகாரிகள் நடவடிக்கை
பந்தலூர் அருகே விபத்தில் வாலிபர் பலி:சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை அகற்றம்-அதிகாரிகள் நடவடிக்கை
பந்தலூர்
பந்தலூர் அருகே நீர்மட்டம் தேவாலா அரசு உண்டு உறைவிடப்பள்ளி பிதிர்காடு அரசுமேல் நிலைப்பள்ளிகளின் அருகேந ெடுஞ்சாலையின் நடுவிலும,் பாட்டவயலிருந்து கூலூர்செல்லும் சாலைகளில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மிகவும் உயரமாக வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் வயநாடுமாவட்டம் மானந்தவாடியிலிருந்து பாட்டவயல் தேவர்சோலை வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். இந்தநிலையில் தேவாலாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உயர்ந்த வேகத்தடையை அகற்றவேண்டும், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டசெயலாளர் சுதர்சன், துணை தலைவர் ராசிரவிகுமார் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபற்றி அறிந்ததும் தேவாலா போலீஸ்இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன்மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உயரமான வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்படி நெடுஞ்சாலைதுறை சார்பில் வேகத்தடைகளை அகற்றும் பணிநடைபெற்று வருகிறது.