சாலை விபத்தில் வாலிபர் படுகாயம்

சாலை விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-07-10 19:26 GMT

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 19). நேற்று முன்தினம் டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். டி.வி.எஸ்.டோல் கேட் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் அவர் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் அடி, தடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்றும், திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்