கார் மோதி வாலிபர் படுகாயம்

கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-04-23 19:02 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 28), விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தத்தனூர் மாந்தோப்பு அருகே வந்த போது எதிர் திசையில் ஆண்டிமடம் விளந்தை கிராமத்தை சேர்ந்த கணேசன் (45) ஓட்டி வந்த கார் பசுபதி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பசுபதியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கணேசனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்