கார் மோதி வாலிபர் படுகாயம்

வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-09-16 23:45 GMT

வால்பாறை

மதுரையை சேர்ந்தவர் வினோத் (வயது 23). இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார். வால்பாறை மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வினோத் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வால்பாறைக்கு இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு வருபவர்கள் மலைப் பாதையில் மிகவும் கவனமாக வரவேண்டும் என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்