விபத்தில் வாலிபர் படுகாயம்

உவாி அருகே விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-07 18:45 GMT

திசையன்விளை:

உவரி அருகே உள்ள குஞ்சன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சஞ்சய்குமார் (வயது 21). இவர் திசையன்விளையில் இருந்து காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் குஞ்சன்விளைக்கு சென்றுகொண்டிருந்தார். ஊருக்கு அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நின்ற மாடு மீது மேட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து சஞ்சய்குமார் படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உவரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்