மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

தூத்துக்குடியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-02-10 18:45 GMT

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகன் சிவசுப்பிரமணியன் (வயது 22). இவர் ஜோதி நகரில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுரை- திருச்செந்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சிவசுப்பிரமணியன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்