நாகமலைபுதுக்கோட்டை,
செக்கானூரணி அருகே உள்ள நாகமலைபுரத்தைச் சேர்ந்தவர் கனி (வயது 27). இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தனியார் நிதி நிறுவனத்தில் கனி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலைக்குச் சென்று விட்டு மதுரையில் இருந்து செக்கானூரணி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கனி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மோனிஷா கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடி வருகின்றனர்.