விழுப்புரம்,
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அம்பலவாணன் (வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக அரசு பஸ் மூலம் பயணம் செய்த அவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இறங்காமல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1 அருகில் இறங்கியுள்ளார். அப்போது தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கிச்சென்ற அதே பஸ் மோதியதில் அம்பலவாணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.