ரெயில் மோதி வாலிபர் பலி

கிணத்துக்கடவு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-10-18 20:30 GMT
கோவை-பொள்ளாச்சி ரெயில் பாதையில் கிணத்துக்கடவு அருகே கோதவாடி பிரிவு அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்