வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்செந்தூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-10 14:13 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நந்தகுமாரபுரத்தை சேர்ந்த வனசிங் மகன் அஸ்வின் (வயது 20). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குற்றாலம் சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது தந்தையிடம் நான் இனி வேலைக்கு போகவில்லை, தொடர்ந்து படிக்க செல்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு அவருடைய தந்தை சரி என்று சொல்லிவிட்டு தூங்க சென்று விட்டார். ஆனால் நள்ளிரவில் வனசிங் விழித்து பார்த்தபோது, அஸ்வின் சேலையால் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனசிங், அக்கம் பக்கத்தினர் துணையுடன் அஸ்வினை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அஸ்வின் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து வனசிங் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்