மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-12 02:21 IST

சிவகாசி முருகன் காலனி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மகன் மாரிமுத்து (வயது 33). இவருக்கும் லட்சுமிபிரியா என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து லட்சுமி பிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்த மாரிமுத்து, சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரிமுத்துவின் தாய் மாரியம்மாள் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்