வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை டவுனில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-24 19:48 GMT

நெல்லை டவுன் கருவேலங்குன்று பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி. இவருடைய மகன் பரமசிவன் (வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்