வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
விருத்தாசலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் தரணிதரன் (வயது 19). இவர் நேற்று முன்தினம் மாலை திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாாின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணிதரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.