வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-10 15:33 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், நெல்லிக்குப்பம் மோட்டூர் அருகே உள்ள நூர்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 25). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவகுமாரின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்