வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-08-17 19:41 GMT

அருமனை:

அருமனை அருகே உள்ள சிதறால் தெங்குவிளையை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அஜித் (வயது 24), தொழிலாளி. அஜித்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, மது போதையில் வீட்டுக்கு வந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்