வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் குருசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் விக்னேஷ் (வயது 30). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.