எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை

எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-23 21:40 GMT

முசிறி:

முசிறி சாலியர் தெருவை சேர்ந்த பெருமாளின் மகன் ஜீவா(வயது 33). இவர் சந்தையில் சம்சா வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. மேலும் நீண்ட காலமாக ஜீவாவுக்கு வயிற்று வலி இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்றார். இதையடுத்து சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்