விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-10 18:52 GMT

ஆலங்குடி அருகே உள்ள வடவாளத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 36). இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விபத்தில் விஜயகாந்த் 2 கால்களும் செயல்படாமல் வீட்டில் முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த விஜயகாந்த் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திர ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்