விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பாப்பாக்குடியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
முக்கூடல்:
பாப்பாக்குடி புதுகிராமம் தெருவை சேர்ந்த நாராயணன் மகன் கணேசன் (வயது 33). இவர் தோசை மாவு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் கணேசனுக்கு கடனும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியில் விஷம் குடித்து கணேசன் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.