விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-31 19:01 GMT

வேப்பந்தட்டை:

சேலம் மாவட்டம், தெடாவூரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26). இவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெட்டுவாள்மேட்டில் தங்கி நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நெல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) அவர் குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்