குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறியதால் வாலிபர் தற்கொலை
குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 12-வது தெருவை சேர்ந்தவர் இமாம் ஜாபர் (வயது 38).இவருக்கு திருமணத்திற்கு முன்பு இருந்தே குடிப்பழக்கம் இருந்து வந்தது. திருமணத்திற்கு பின்பும் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இமாம் ஜாபர் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.