செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டியில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டனர்

Update: 2022-11-05 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டனர்.

தற்கொலை மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி தாமஸ் நகர் மேட்டு தெருவில் குடியிருப்பவர் முனியசாமி மகன் அம்பேத்கர் என்ற மைக்கேல் (வயது 33). டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று காலை 10 மணியளவில் இதே பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதைப்பார்த்ததும் அப் பகுதி மக்கள் திரண்டு வந்தனர். அவரை கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

கோரிக்கை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற அம்பேத்கர் என்ற மைக்கேலிடம் செல்போனில் பேசினார்.

அப்போது அவரிடம் தாமஸ் நகர் பகுதியில் அமைப்பதற்காக தனியார் இடத்தில் வைக்கப் பட்டுள்ள 8 அடி உயர அம்பேத்கர் வெண்கல சிலையை அமைக்க இடம் தேர்வு செய்து கொடுத்து, சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பரபரப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க வேண்டும், எனவே போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வரும்படி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் அம்பேத்கர் என்ற மைக்கேல் போராட்டத்தை கைவிட்டு செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் அம்பேத்கர் என்ற மைக் கேலை போலீசார் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்