வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது

வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-01 19:00 GMT

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ஆசிரியர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 30-ந் தேதி மர்ம நபர் அத்துமீறி நுழைந்தார். அப்போது, அந்த வீட்டில் உள்ளவர்கள் அந்த நபரை பிடிக்க முயன்ற போது, தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வீட்டில் அத்துமீறி பதுங்கி இருந்தது கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தை சேர்ந்த சவுந்தர் (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்