கஞ்சா கடத்திய வாலிபர் கைது
புதுப்பேட்டையில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அம்மாப்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் வந்த 2 பேரை வழிமறித்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். தப்பிச்செல்ல முயன்ற மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி ரெயிலடி பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23) என்பதும் ஒரு கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த கமலேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.