கஞ்சா விற்ற வாலிபர் கைது
மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவிழந்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராமன் மகன் மகாவிஷ்ணு (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.