போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் கரை பகுதியில் பள்ளி, கல்லூரி, மாணவர்கள், வாலிபர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் நின்ற திருச்சி காந்திமார்க்கெட் சந்தானபுரம் வரகனேரி பகுதியை சேர்ந்த ஹசாம் அலி (26) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் போதை மாத்திரை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 128 மாத்திரைகள், ஊசி, உப்பு தண்ணீர் பாட்டில்கள், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.