கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-02 18:14 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஜமுனாமரத்தூர்-எருமையனூர் செல்லும் வழியில் பால்வாரி கிராமம் கூட்ரோடு அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜமுனாமரத்தூர் தாலுகா பால்வாரி கிராமத்தை சேர்ந்த சவுந்தர் (வயது 29) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1,150 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்