நீடாமங்கலம்
நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரப்பனாமேடு ஆற்றங்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பரப்பனாமேடு மேலகடம்பூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது36) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.