கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி மற்றும் போலீசார் தாட்கோ காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கோவில் அருகில் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் தாட்கோ காலனியை சேர்ந்த பிரதீப் (வயது 21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வடக்கு போலீசார் அவரை கைது செய்தனர்.