சிறுவனை போதைப்பொருள் பயன்படுத்த கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

பாவூர்சத்திரம் பகுதியில் சிறுவனை போதைப்பொருள் பயன்படுத்த கட்டாயப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-15 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பகுதியில், சிறுவன் ஒருவனுக்கு 3 வாலிபர்கள் சேர்ந்து போதைப்பொருள் கொடுத்து பயன்படுத்துமாறு கூறி கட்டாயப்படுத்துவது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுவன் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பதும், அவனுக்கு போதைப்பொருள் கொடுத்தது பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த வாகனம் வீரகேரளம்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்தது என்பதும், மாணவர்களை ஏற்றிச்செல்வதற்காக நாகல்குளத்தில் இரவில் நிறுத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 17 வயது வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்