வாலிபர் குத்திக்கொலை; மைத்துனர் கைது

திருச்சுழி அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-11 19:09 GMT

திருச்சுழி,

திருச்சுழி அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப பிரச்சினை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியை சேர்ந்த சுந்தரி மகள் அன்னலட்சுமி(வயது 30). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த காமராஜ் (35) என்பவருக்கும் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அன்னலட்சுமியின் தம்பி பொன்ராஜ்(21), காமராஜை சத்தம் போட்டு வந்துள்ளார். இதனால் காமராஜூக்கு, பொன்ராஜ் மீது கோபம் இருந்து வந்தது.

கத்தியால் குத்திக்கொலை

அன்னலட்சுமியின் குழந்தைகளை பொன்ராஜ் தூக்கி கொஞ்சுவது வழக்கம். அதேபோல அவர் குழந்தைகளை கொஞ்சுக்கொண்டு இருந்த போது ஆத்திரம் அடைந்த காமராஜ் தான் கையில் வைத்திருந்த கத்தியால் பொன்ராஜை குத்தினார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பொன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்