வாலிபர் தற்கொலை
போடியில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சென்றாயப் பெருமாள் (வயது 34). இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சென்றாயப்பெருமாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.