நெகமம்
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் தமிழ்வாணன்(வயது 35). இவர் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். ஆனால் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மன வேதனையுடன் காணப்பட்டார். மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தமிழ்வாணன் கடந்த 27-ந் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தார்.இதனால் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்வாணன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.