இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை
வாலாஜாவில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தனுஸ்ரீ (வயது 20). வீட்டில் தனியாக இருந்த போது தனுஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.