தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

செய்யாறு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Update: 2022-06-18 12:34 GMT

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா செய்யாற்றை வென்றான் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் செய்யாறில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இவர் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது அதே கிராமத்தை சேர்ந்த விநாயகம் (38) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இளம்பெண்ணுக்கு விநாயகம் பாலியல் தொல்லை கொடுத்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்