அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் குழு

சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெற அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் குழு- கமிஷனர் சந்தோஷ்குமார் தகவல்

Update: 2022-06-08 21:51 GMT

நெல்லை:

 மாநகரில் காணாமல் போன ரூ.20 லட்சத்து 12 ஆயிரத்து 200 மதிப்புள்ள 104 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். அந்த செல்போன்களை உரியவர்களிடம், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் வழங்கினார். அதேபோல் இணையவழியில் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்தும் ரூ.15 லட்சத்து 83 ஆயிரத்து 154 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் கூறுகையில், ''அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரம், ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்ற தகவலை கேட்டால் கொடுக்க வேண்டாம். பரிசு விழுந்ததாக குறுஞ்செய்தி அனுப்பினாலோ, 'லிங்க்' அனுப்பினாலோ அவற்றை கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட வேண்டும். இணையத்தில் அறிமுகமில்லா நபர்களிடமிருந்து அழைப்பு வந்தாலும் புறக்கணிக்க வேண்டும். பயன்படுத்திய செல்போன்களை அசல் பில் இல்லாமல் வாங்க வேண்டாம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாக புகார்களை பதிவு செய்ய வேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெறுவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்