மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆசிரியர்கள்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது: மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆசிரியர்கள்
தமிழகம் முழுவதும் இன்று(வியாழக்கிழமை) முதல் 10-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் அருகே உள்ள வடகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அப்போது அவர்கள் பேசுகையில், வேறு பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுகிறோம் என்ற பயம் வேண்டாம். பயம் இல்லாமல் தேர்வை சிறந்த முறையில் எழுதவேண்டும். மேலும் தேர்வு அறைகளில் வேண்டதகாத நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம் என்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.