கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா
கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் முன்பு கீழ்பென்னாத்தூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 39-ம் ஆண்டு இயக்க தின விழா கொண்டாடப்பட்டது.
வட்டார தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாபு வரவேற்றார். துணைத் தலைவர் பால் தங்கம் இயக்க கொடியேற்றினார்.
இதில் வட்டார செயலாளர் அய்யாசாமி, கல்வி மாவட்ட செயலாளர் கறீம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குலசேகரன், மகளிரணி தலைவர் கற்பகம் ஆகியோர் சங்கசெயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும், இயக்கத்தில் அதிகஅளவில் உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை வலுப்படுத்துவது குறித்து பேசினர்.