டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
தீராத வயிற்று வலியால் அவதியடைந்த டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தோகைமலை அருகே உள்ள வடசேரி பண்டார தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 45). இவர் ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்த சோமு அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி தீரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் வடசேரி பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.