டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு போனது.

Update: 2022-12-25 18:45 GMT

ஊட்டி,

ஊட்டி-மஞ்சூர் சாலை தேவர்சோலை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனை முடிந்தவுடன் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியாக வரும்போது டாஸ்மாக் கடையின் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து லவ்டேல் போலீஸ் நிலையத்திற்கும், டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கடையில் இருந்த மதுபாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் புகார் கொடுக்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்தினர் கூறுகையில், 10-க்கும் குறைவான மதுபாட்டில்கள் திருடு போனது. வேறு ஏதாவது திருடு போய் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்