டாஸ்மாக் உதவி விற்பனையாளர் சஸ்பெண்டு
டாஸ்மாக் உதவி விற்பனையாளர் சஸ்பெண்டு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி ஆக்கூர் முக்கூட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித்தொகுப்பு 2014ன் கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்கூர் டாஸ்மாக் கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.