முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றி தரப்படும்

முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றி தரப்படும்;

Update: 2022-07-06 19:50 GMT

பாபநாசம்:

அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றி தரப்படும் என ஒன்றியக்குழு தலைவர் பேசினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய மன்ற கூடத்தில் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, ஒன்றியக்குழு துணை தலைவர் தியாக பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

முன்னுரிமை அடிப்படையில்

பின்னர் பேசிய ஒன்றியக்குழு தலைவர், ஆணையர்கள் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றி தரப்படும் என கூறினர். கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னாள் முதல்-அமைச்சர்கள் படங்களை மன்ற கூடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த ஆணையர் வருகிற கூட்டத்தொடருக்குள் முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் வைக்கப்படும் என்றார். இதில் ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், சுவாமிநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உதவியாளர்கள் மற்றும் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்