ஜாகீர் அம்மாபாளையம் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்
அடகு நகை ஏலத்தில் முறைகேடு: ஜாகீர் அம்மாபாளையம் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டியில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக அடகு நகை ஏலத்தில் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு புகார் சென்றது. இதையடுத்து அந்த கூட்டுறவு சங்கத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சங்க நிதி இருப்பு குறைவு, அடகு நகையை ஏலம் விடாமல் ஏலம் விட்டதாக கணக்கு காட்டி முறைகேடு செய்தது, நகை கடனுக்கு குறைவான வட்டி வசூலித்து நிதியிழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்க செயலாளர் ஜெய் உமாபதியை பணி இடைநீக்கம் செய்து சங்க தலைவர் பரமசிவம் நடவடிக்கை எடுத்தார். செயலாளருக்கான பொறுப்பை உதவி செயலாளர் ரத்தினமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.