தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு

ஆம்பூர் அருகே கழிவுநீரை நிலத்தில் தேக்கிய தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2023-05-12 18:37 GMT

வாணியம்பாடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் ஆம்பூர் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஜலால் ரோடு, மளிகைதோப்பு பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவு நீரினை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்தில் தேக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவியது. அதன் காரணமாக மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பு துண்டிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பினை துண்டிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இயக்கம் நிறுத்தப்பட்டது.

தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரினையோ அல்லது திடக்கழிவுகளையோ நிலத்தில் அல்லது நீர் நிலைகளில் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்தரவு அளிக்கப்படும். மேலும், உரிமையாளர்கள் மீது கோர்ட்டில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்