தமிழ் புலிகள் இயக்க பிரமுகர் கைது

தமிழ் புலிகள் இயக்க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-24 19:05 GMT

சின்னதாராபுரம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்தது. இதைடுத்து சின்னதாராபுரம் அருகே உள்ள கரூர்-தாராபுரம் ரோட்டில் ராஜபுரம் பிரிவு என்னும் இடத்தில் சின்னதாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் எலவனூரை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 32) என்பவர் வந்தார். இவர் தமிழ் புலிகள் இயக்கத்தின் க.பரமத்தி ஒன்றிய செயலாளராக உள்ளார். ஜெகதீசை வழிமறித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, அவர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதையடுத்து ஜெகதீஷ் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிந்து, அவரை ேபாலீசார் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்