தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் கையெழுத்து இயக்கம்
பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரியும், கள்ளச்சாராயம், போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்தை நாளை (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக அரசுக்கு அனுப்பவுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.