பா.ஜ.க.வை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது - மதுரையில் வைகோ பேட்டி
பா.ஜ.க.வை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என மதுரையில் வைகோ கூறினார்.
பா.ஜ.க.வை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என மதுரையில் வைகோ கூறினார்.
மதுரை பொதுக்கூட்டம்
ம.தி.மு. க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை பகுதியில் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவருக்கு புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே மொழி என இந்துத்துவ கொள்கையை வளர்க்கவும், இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கவும் பா.ஜ.க. பார்க்கிறது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று நடைமுறைக்கு ஒத்துவராத விஷயத்தை பா.ஜ.க. கூறி கொண்டிருக்கின்றது. அதற்கு சரியான பதிலை தமிழகம் கொடுக்கும், தமிழகத்தில் அதற்கு இடமில்லை என்பதை வரலாறு நிரூபிக்கத்தான் போகிறது. பா.ஜ.க.வை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. அது போல சனாதன தர்மத்தையும் ஏற்றுக்கொள்ளாது. இவர் அவர் கூறினார். இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் புறப்பட்டு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு இரவு தங்கி விட்டு, இன்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.