தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு - 67 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

Update: 2022-11-27 09:04 GMT

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் சார்பில், 2-ம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது . இதில் 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்தினர்.தேர்வு மையங்களில் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுஇதில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் சேர்க்கப்படுவர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை , புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்